» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 17ம் தேதி தொழில் திட்ட அறிக்கை தயாரிப்பு பயிற்சி

வெள்ளி 12, ஜூலை 2019 8:28:03 AM (IST)

தூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி குறு, சிறு தொழில்கள் சங்க (துடிசியா) பொதுச் செயலர் ராஜ் செல்வின் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், தூத்துக்குடி குறு, சிறு தொழில்கள் சங்கமும் (துடிசியா) இணைந்து நடத்தும் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி முகாம் தூத்துக்குடியில் ஜூலை 17 ஆம் தேதி தொடங்குகிறது.

பயிற்சியின்போது, தொழிலின் வகைகள், தொழிலை தேர்ந்தெடுக்கும் முறைகள், தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல், அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறும் வழிமுறைகள், வங்கியின் எதிர்பார்ப்புகள், தொழில் தொடங்க தேவையான அரசு பதிவுகள், சந்தை ஆய்வு, வெற்றி பெற்ற தொழிலதிபர்களிடம் மற்றும் அரசு உயரதிகாரிகளிடம் நேரடியாக கலந்துரையாடல், சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவும் நவீன தொழில் நுட்பங்கள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

பயிற்சியில் 18 வயது நிரம்பிய 8 ஆம் வகுப்பு முடித்த தொழில் ஆர்வம் உள்ள ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேரலாம். ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை 10 நாள்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை துடிசியா அலுவலகத்தில் பயிற்சி நடைபெறும். பயிற்சி முகாம் குறித்த தகவலுக்கு தூத்துக்குடி முத்தம்மாள்காலனியில் உள்ள துடிசியா அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது 0461-2347005 என்ற தொலைபேசி எண்ணிலும், 98401-58943 மற்றும் 77087-84867 என்ற செல்ப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamAnbu Communications

Black Forest Cakes

CSC Computer Education
Thoothukudi Business Directory