» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கர்நாடகா, கோவா நிலைமை தமிழகத்திற்கு வருமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

வியாழன் 11, ஜூலை 2019 5:05:11 PM (IST)கர்நாடாக, கோவா நிலைமை தமிழகத்திற்கு வராது. 2021-க்கு பின்னரும் அதிமுக ஆட்சி தொடரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கட்டலாங்குளத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் 309 பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் அங்குள்ள நினைவு மண்டபத்தில் இருக்கும் சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதை போன்று அழகுமுத்துக்கோன் வாரிசுகள், பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதனை தொடர்ந்து அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, மகளிர்குழுவினருக்கு கடன் உதவி தொகை, அம்மா இருசக்கர வாகனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ. ராஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, "வீரன் அழகுமுத்து கோன் அரண்மனையை பராமரிக்கவும், அவரது வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கும் அதிமுக அரசு நிச்சயமாக பரிசீலினை செய்யும். 

தமிழகத்தில் எந்தவொரு பிரச்சினைக்கு உடனுக்கு உடன் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆணவ கொலைகள் ஆங்காங்கே உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப உணர்ச்சிபூர்வமான நிலையில் திடீரென ஏற்படுகிறது. ஆனாலும், இப்படிப்பட்ட நிலைகள் பெரிதாக நடக்காமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நீட் தேர்வு குறித்து அரசிதழில் வெளியிட்டவர்கள் காங்கிரஸ் - திமுக கூட்டணி தான். அப்போதே முதல்வர் ஜெயலலிதா, அதிமுக மக்களவை உறுப்பினர்கள் எதிர்த்தனர். எனவே, நீட் தேர்வுக்கு வித்திட்டவர்கள் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. 

இதனை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாரதிய ஜனதா அரசு நடைமுறைபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீட் தேர்வு குறித்து கடந்த ஒரு வாரமாக சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது. டி.டி.வி. தினகரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் அவரது வாதத்தை சட்டமன்றத்துக்கு வந்து பேசியிருக்கலாம். சட்டமன்ற நடவடிக்கையில் பங்கு பெறலாமல் வெளியே கூறும் கருத்துகளுக்கெல்லாம் நாங்கள் பதிலளிக்க முடியாது, என்றார் அவர். "கர்நாடகா, கோவா நிலைமை தமிழகத்திற்கு வருமா? என்ற கேள்விக்கு  அது கற்பனையான கேள்வி, 2021வரை அதிமுக ஆட்சி தான், அதன் பின்பு எங்கள் ஆட்சி தொடரும். தமிழகத்தில் என்றைக்கும் திராவிட கட்சிகள் ஆட்சி தான் நீடிக்கும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

CSC Computer Education

Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory