» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணி : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

வியாழன் 11, ஜூலை 2019 3:43:14 PM (IST)கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் 230 மாணவ, மாணவிகளுக்கு ரூ.28.22 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (11.07.2019) நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு 230 மாணவ, மாணவிகளுக்கு ரூ.28.22 லட்சம் மதிப்பிலான மடிக்கணிணிகளை வழங்கினார்.

பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா மாணவ, மாணவிகளின் உலக அறிவை வளர்த்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். 2011ம் ஆண்டு முதல் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நமது மாநிலம் கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் கல்வித்துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி, சீருடை, சைக்கிள், புத்தகப்பை உள்ளிட்ட 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இடைநிற்றலை தடுக்கும் வகையில் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.28 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்வி துறைக்கு இந்த அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இருந்தபோதும் நீட் தேர்வை மாணவ, மாணவிகள் எதிர்கொள்ளும்வகையில் தமிழக அரசு மூலம்; 412 மையங்கள் அமைக்கப்பட்டு இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நீட் தேர்வில் தமிழகத்தில மாணவ, மாணவிகள் அதிக இடங்களை பெறும் வகையிலான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு பயிலும் 11656 மாணவ, மாணவிகளுக்கும், இரண்டாம் ஆண்டு பயிலும் 11656 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 23312 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணிகள் ரூ.28.61 கோடி மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மடிக்கணிணியின் விலை ரூ.12273 ஆகும். கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் இன்று 230 மாணவ, மாணவிகளுக்கு ரூ.28.22 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கப்படுகிறது. மடிக்கணிணி பெறும் மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி உயர்கல்விகளை பயின்று வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசினார்.

இவ்விழாவில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் அச்சையா, மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன், கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் ராமச்சந்திரன், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யாத்துரைபாண்டியன், ரமேஷ், ராமச்சந்திரன், கணேஷ் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தினி மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest Cakes


CSC Computer Education


Nalam PasumaiyagamThoothukudi Business Directory