» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலவசமாக பண்ணைக் குட்டைகள் அமைத்திட தொடர்பு கொள்ளலாம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

வியாழன் 11, ஜூலை 2019 12:03:07 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இலவசமாக பண்ணைக் குட்டைகள் அமைத்திட வேளாண்மை பொறியியல் துறையை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காவேரி டெல்டா மற்றும் கடற்கரை மாவட்டங்களில், விவசாய நிலப்பகுதிகளில் மழைநீரை சேமித்து பயிருக்குத் தேவையான காலத்தில் பாசன நீரைப் பயன்படுத்தும் வகையில் இரண்டாம் கட்டமாக புதிதாக 8,202 எண்கள் பண்ணைக்குட்டைகள் ரூ.82.02 கோடி மதிப்பில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நிலப்பகுதிகளில் கிடைக்கப்பெறும் மழைநீரை பண்ணைக்குட்டைகள் அமைத்து மழைநீரை சேமிப்பதன் மூலம் பயிருக்குத் தேவையான காலங்களில் பாசனம் செய்யப் பயன்படுத்த முடியும். அதே சமயம் அந்தப்பகுதியில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பெற்று நிலத்தடிநீர் மட்டம் காக்கப்படுவதோடு, கடல்நீர் உட்புகாவண்ணம் நிலத்தடி நீரின் பண்பும் காக்கப்படும். பண்ணைக்குட்டையில் சேமிக்கப்படும் மழை நீரில் மீன்களை வளர்க்கவும் பயன்படுத்தலாம்.

இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 2018-19 நிதியாண்டில் 139 பண்ணைக் குட்டைகள் ரூ.134.77 இலட்சம் மதிப்பில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.1 இலட்சம் மதிப்பில் 515 பண்ணைக் குட்டைகள் ரூ.515.00 இலட்சம் மதிப்பில் 100 சதவிகித மானியத்தில் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30.00 மீட்டர் நீளம், 30.00 மீட்டர் அகலம், 2.00 மீட்டர் ஆழம் கொண்ட ஒரு பண்ணைக் குட்டையில் 1800 கன மீட்டர் மழை நீரை சேமிக்க இயலும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் வரைபடம், கம்ப்யூட்டர் பட்டா, முகவரி, புகைப்படம் ஆகிய விவரங்களுடன் தங்கள் வட்டாரத்திற்கு உரிய கீழ்கண்ட அலுவலகங்களில் விண்ணப்பித்து பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் அணுக வேண்டிய முகவரி - தொலைபேசி
  • விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி, கயத்தார் மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள்: உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 27H, எட்டையபுரம் ரோடு பிரதான சாலை, கனரா வங்கி பின்புறம், கோவில்பட்டி. தொலை பேசி எண் -04632 234280, 9442049591
  • தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 4/122 A1, ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு, ஆறுமுகச்சாமி காலனி அருகில், தூத்துக்குடி. தொலை பேசி எண் -0461 2347280, 9443694245.
  • திருச்செந்தூர், சாத்தான்கும், உடன்குடி மற்றும் ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 65/10சி முத்து மாலை அம்மன் கோவில் தெரு, திருச்செந்தூர்- தொலை பேசி எண் 04639 245280, 9443157710." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


CSC Computer Education
Thoothukudi Business Directory