» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல் : 3 பேர் பலி

வியாழன் 11, ஜூலை 2019 10:31:41 AM (IST)



எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த கண்டெயினர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் துரைச்சாமிபுரம் அருகே உள்ள மதுரை -  தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அருப்புக்கோட்டை பாளையம் பட்டியை  சேர்ந்த ராஜம்மாள், ராஜாராம் ,சரோஜா ஆகிய 3 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும்  கார் டிரைவர் சுகன், காரில் பயணம் செய்த செல்வலட்சுமி ,ராஜ்குமார் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். 

அருப்புக்கோட்டையில் இருந்து - கோவில்பட்டியில் நடைபெறும் திருமணத்திற்கு சென்ற போது விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam




CSC Computer Education

Black Forest Cakes



Thoothukudi Business Directory