» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பகுதிநேர நியாயவிலை கடை கோரி கிராம மக்கள் மறியல்

வியாழன் 11, ஜூலை 2019 8:50:59 AM (IST)

சாத்தான்குளம் அருகே தாய்விளையில் பகுதிநேர நியாயவிலை கடை கேட்டு கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் எழுவரைமுக்கி ஊராட்சிக்குள்பட்ட தாய்விளையில் சுமார் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சுமார் 6 கிமீ தூரம் உள்ள தோப்பூரில் உள்ள நியாயவிலை கடைக்கு சென்று பொருள்கள் வாங்கி வருகின்றனர். தோப்பூருக்கு இக்கிராம மக்கள் நடந்து அல்லது ஆட்டோ பிடித்து சென்றுதான் பொருள் வாங்க வேண்டிய நிலை உள்ளதாகவும் இதனால் பணம் விரயம் ஆவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் தாய்விளையில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். 

இதையடுத்து நேற்று காலை தாய்விளை கிராம மக்கள் சுமார் 75பேர் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்க வலியுறுத்தி திடீரென மெஞ்ஞானபுரம் - நாசரேத் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனை அறிந்த சாத்தான்குளம் வட்டாட்சியர் ஞா. ஞானராஜ் மெஞ்ஞானபுரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சிவசங்கர், உதவி ஆய்வாளர்கள் அமலோற்பவம், திருப்பதி, நாசரேத் காவல் ஆய்வாளர் சகாய சாந்தி ஆகியோர் மறியலில் ஈடுப்பட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Anbu Communications



Black Forest Cakes

CSC Computer Education



Thoothukudi Business Directory