» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஐஎஃப்ஹெச் ஆர்எம்எஸ் பதிவு: உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!!

வியாழன் 11, ஜூலை 2019 8:44:43 AM (IST)

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுபவர்கள் ஐஎஃப்ஹெச் ஆர்எம்எஸ் (ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை மற்றும் மனிதவள நிர்வாகம்) திட்டத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட கருவூல அறிவிப்பின் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்குவதற்கு ஐஎஃப்ஹெச் ஆர்எம்எஸ் திட்டத்தின் கீழ் கணினி பதிவு மேற்கொள்ளப்படவுள்ளது. 

எனவே, தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலமாக பராமரிப்பு உதவித்தொகை பெறும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலர்கள் ஐஎஃப்ஹெச் ஆர்எம்எஸ் திட்டத்துக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக சிறப்பு பணியாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes

CSC Computer Education

Anbu CommunicationsThoothukudi Business Directory