» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடோன்களில் பதுக்கிய ரூ.2 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: ரூ.10 ஆயிரம் அபராதம்

வியாழன் 11, ஜூலை 2019 8:17:38 AM (IST)

கோவில்பட்டியில் 2 குடோன்களில் பதுக்கிய ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டி நகரசபை ஆணையர் அட்சயா உத்தரவின்பேரில், நகரசபை சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் காஜா, சுரேஷ்குமார், வள்ளிராஜ், திருப்பதி உள்ளிட்ட குழுவினர் நேற்று கோவில்பட்டி மெயின் ரோடு, பண்ணைத்தோட்டம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 2 குடோன்களில் பதுக்கப்பட்ட மொத்தம் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மேலும் சில கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர். நேற்று நடந்த சோதனையில் மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 2 குடோன்களின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று கடைக்காரர் களிடம் அறிவுறுத்தப்பட்டது.


மக்கள் கருத்து

நிஹாJul 11, 2019 - 10:34:34 AM | Posted IP 173.2*****

பறிமுதல் செய்யப்பட பொருட்கள் எங்கு தயாரிக்கப்பட்டது? அதை கண்டுபிடித்து தயாரிப்பை நிறுத்த வேண்டியதுதானே? இதுவும் குட்கா கதைதான். தடை என்று சொல்லிக்கொண்டே நம் கண் முன்பே விற்பனையை அனுமதிப்பார்கள். கண்துடைப்பாக பறிமுதல் செய்வார்கள். ஊழல் செய்ய புதிய வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications
Thoothukudi Business Directory