» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போக்குவரத்து பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிப்பேன்: தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் பேட்டி

சனி 29, ஜூன் 2019 12:07:28 PM (IST)தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக அருண் பாலகோபாலன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த முரளிரம்பா சிபிஐ பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரை மாநகர் போக்குவரத்துப்பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த அருண் பாலகோபாலன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார். எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புதிய எஸ்பிக்கு முரளி ரம்பா பூச்செண்டு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

பின்னர் எஸ்பி அருண் பாலகோபாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் இதற்கு முன் மதுரை மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக பணி புரிந்துள்ளேன். தற்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளேன். தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுப்பேன். சட்டம் ஒழுங்கு, சாலை விதிகள் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பேன் என்றார்.  நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடியில்  பணியாற்றினார் 

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல்கண்காணிப்பாளரான அருண் ராமகோபாலன் கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்தவர். 34 வயது நிறைந்த இளைஞரான இவர் ஒரு பி.டெக் (எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்) பட்டதாரி. மலையாளம் தவிர ஆங்கிலம், இந்தி, தமிழ், ஆகிய மொழிகளில் புலமை வாய்ந்தவர். 2013 ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக தமிழக காவல்பணியில் சேர்ந்த இவர் சிவகங்கை ஏஎஸ்பியாக பயிற்ச்சி முடித்தபின்னர் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை, நாங்குநேரி ஆகிய இடங்களில் ஏஎஸ்பியாக பணியாற்றினார்.சமீபத்தில் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று மதுரை போக்குவரத்து போலீஸ் துணைகமிஷ்ணராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018  ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த வன்முறை சம்பவத்தின் போது தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து

நிஹாJul 1, 2019 - 10:26:37 AM | Posted IP 108.1*****

கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஸ்டெர்லைட் சம்பவத்தின்போது இவர் பாதுகாப்பு பணியிலிருந்த்தார் என்பது சற்று உற்றுநோக்கவேண்டிய விஷயம்.

அருண்Jun 30, 2019 - 10:47:38 PM | Posted IP 157.5*****

என் பேருல ஒரு நல்ல மனுசனா . வாவ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes


Anbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory