» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயநிலங்களில் எரிவாயுகுழாய் பதிக்க கூடாது : தூத்துக்குடி ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

வியாழன் 27, ஜூன் 2019 1:43:46 PM (IST)விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க கூடாது என குலையன்கரிசல் விவசாயிகள் சார்பில் தூத்துக்குடி மாவட்டஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுகவினர் மற்றும் விவசாயிகள் உரம் விலையை குறைக்க கோரி உரமூடைகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்தியஅரசு விவசாயிகளுக்கு தேவையான உரங்களின் விலையை 50 கிலோ மூடைக்கு பழைய விலையை விலையை விட ரூ. 400 உயர்த்தியுள்ளதை குறைக்க வேண்டும். உரக்கடைகளில் பழைய உரங்களை புதிய விலையில் விற்பதை தடுக்க வேண்டும். உரக்கடைகளில் ஆன்லைனில் பில் தர வேண்டும். 

உரம் இருப்பு குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக மாவட்ட துணை செயலாளர் செல்லச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிராஜ், கந்தசாமி, அன்பழகன், மகராஜன், சுந்தர்ராஜ், தொம்மை, சரவணன் உள்ளிட்ட மதிமுக வினர்,விவசாயிகள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்டஆட்சியர் உறுதி தெரிவித்தார்.
விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க கூடாது

குலையன்கரிசல் கிராமவிவசாய சங்கத்தினர் அதன் தலைவர் சசிவர்ணசிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் ஆட்சியர் சந்திப்நந்தூரிக்கு அளித்த மனுவில், விவசாய நன்செய்நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதால் சம்பந்தப்பட்ட நிலங்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார அனைத்து நிலங்களின் விவசாயமும் பாதிக்கப்படும் சமீபத்தில் ஆந்திராவில் இதே எரிவாயு குழாய் வெடித்ததில் 6 கிமீ தூரத்திற்கு தீ எரிந்ததாக அறிந்தோம். 

இது போல் இங்கும் விபத்து ஏற்பட்டால் குலையன்கரிசல், பாண்டியாபுரம். பொட்டல்காடு ஆகிய கிராமங்கள் தீயால் பாதிக்கப்படும் எனவே எங்கள் ஊருக்கு வடக்கே ஓடை வழியே எரிவாயு குழாய் பதிக்குமாறு கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2பேர் கைது

செவ்வாய் 12, நவம்பர் 2019 10:46:36 AM (IST)

Sponsored Ads

Anbu Communications

Black Forest CakesNalam Pasumaiyagam

CSC Computer Education
Thoothukudi Business Directory