» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்குவது நீதிமன்ற அவமதிப்பு : சமூக ஆர்வலர் புகார்

வியாழன் 27, ஜூன் 2019 12:50:55 PM (IST)தூத்துக்குடி தெற்கே இருந்து புறப்பட்ட திருச்செந்தூர் திருநெல்வேலி வழித்தட பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என சமூக ஆர்வலரும் மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவருமான சத்யா லெட்சுமணன் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே செல்லும் வழித்தட பேருந்துகளை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் என்பதற்கு உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை நீதியரசர்கள் தெற்கே இருந்து செல்லும் வழித்தட பேருந்துகளான திருச்செந்தூர் திருநெல்வேலி மற்றும் நகர பேருந்துகளை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இயக்கவும் வடக்கிலிருந்து வரும் பேருந்துகள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பயணிகளை இறக்கி செல்ல 16.10.1999 உத்தரவு வழங்கினர்.

தொடர்ந்து செயல்பட்டு வந்த தெற்கே இருந்து வரும்வழித்தட பேருந்துகளை மீண்டும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த உத்தரவை எடுத்து மீண்டும் நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் வழக்கு எண்: w.P.no:12441 2010 m.P.1 5/10 ஆகும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வழங்கிய 16.10.1999 ந் தேதி உத்தரவை மீண்டும் செயல்படுத்த நீதியரசர் 31.08.2010 ல் தீர்ப்பு வழங்கினார். இந்த உத்தரவை செயல்படுத்த 30.08.2011 ந் தேதியிட்ட கடிதம் எண் RNO3243/டB1/2010ல் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் கடந்த8 ஆண்டுகளாக எந்த பிரச்சினையின்றி பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். பழைய பேருந்து விரிவாக்கம் சொல்லி தெற்கே இருந்து வரும் திருச்செந்தூர் திருநெல்வேலி பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுத்ததாக பொதுமக்கள் பயணிகள் பேசி வருகின்றனர் தூத்துக்குடி 3ஆம் கேட் பாலம் தரம் மற்றவை இந்த பாலத்தில் தெற்கே இருந்து வரும் திருச்செந்தூர் உவரி கன்னியாகுமரி ஏரல் சிவத்தையாபுரம் திருவைகுண்டம் திருநெல்வேலி தென்காசி நாகர்கோவில் வழித்தட பேருந்துகள் நாள் ஒன்றுக்கு 850 டிரிப் செயல்படக் கூடியவை. 

இந்த பாலத்தில் தான் லாரி பேருந்து கனரக வாகனம் இரு நான்கு சக்கர வாகனம் சென்று வருவதலால் பாலத்தில் அதிர்வுகள் ஏற்படுகிறது மேலும் போக்குவரத்து நெரிசல் வாகனங்களால் ஏற்படுகிறது கடந்த 6 மாதங்களில் 9 உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. 4ஆம் கேட் ரயில்வே  இருப்பதால் இந்த மார்க்கத்தில் அடிக்கடி ரயில்கள் சென்று வருவதால் கேட் அடிக்கடி மூடப்படுவதால் இந்த பகுதயில் பெரும் போக்குவரத்து நெரிசல் வாகனங்களால் ஏற்படுகிறது பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தெற்கே செல்லும் வழித்தட பேருந்துகளை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர்கள் வழங்கிய உத்திரவை செயல்படுத்த கேட்டுக்கொள்கிறேன். காலதாமதம் ஏற்படுமானால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய நடவடிக்கை எடுத்தால் தற்காலிக பேருந்து நிலையம் அமைய தேடும் நிலை ஏற்படாது. மேற்கண்ட மனுவை சமூக ஆர்வலரும் மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவருமான சத்யா லெட்சுமணன்  மாவட்ட ஆட்சித் தலைவர் போக்குவரத்து துறை அலுவலர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2பேர் கைது

செவ்வாய் 12, நவம்பர் 2019 10:46:36 AM (IST)

Sponsored AdsBlack Forest Cakes

Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory