» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயி வெட்டிக்கொலை: மகள் கண்முன் பயங்கரம் - 2பேருக்கு போலீஸ் வலை

வியாழன் 27, ஜூன் 2019 12:45:36 PM (IST)

கயத்தாறு அருகே மகள் கண்முன்னே விவசாயியை வெட்டிக் கொன்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறையடுத்த அய்யனார்ஊத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் அண்ணாமலை(40). இவர் தனது மனைவி மாசாணம், மகள் முத்துலட்சுமி ஆகிய மூவரும் ஊருக்கு அருகே தென்பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான தோப்பில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அண்ணாமலையின் உறவினர் உடையார் என்பவர் தேங்காயை பறித்தாராம். இதனால் அண்ணாமலைக்கும், உடையாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அதையடுத்து உடையார் அங்கிருந்து சென்றுவிட்டாராம்.   

பின்னர் அண்ணாமலை தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தாராம்.  அப்போது எதிரே உடையார் ஓட்டிக் கொண்டு வந்த பைக்கை மோட்டார் சைக்கிள் மீது மோதவிட்டு தகராறு செய்தாராம்.  அப்போது தகராறு முற்றிய நிலையில், உடையார் மற்றும் அவருடன் பைக்கில் வந்த கோதண்டராமன் ஆகிய இருவரும் அண்ணாமலையை அரிவாளால் தாக்கினார்களாம். அதை தடுக்கச் சென்ற அவரது மகள் முத்துலட்சுமிக்கும் காயம் ஏற்பட்டது. உடையாரும், கோதண்டராமனும் தப்பியோடிவிட்டனர். 

பலத்த காயமடைந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் மற்றும் போலீஸார் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த முத்துலட்சுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி தாளாளர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை

திங்கள் 23, செப்டம்பர் 2019 8:13:04 PM (IST)

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory