» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயாவில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

வியாழன் 27, ஜூன் 2019 12:41:18 PM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளயில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. 

தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளியின் சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், பேரணி நடைபெற்றது. போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு கண்காணிப்பாளர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார். துணை ஆய்வாளர்கள் சண்முகவேல், இதயதுல்லா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக துணைக் கண்காணிப்பாளர் முரளிதரன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி, பேரணியில் மாணவ, மாணவிகளோடு கலந்து கொண்டார். 

சிறப்பு விருந்தினர்களை பள்ளியின் தாளாளரும், முதல்வருமான ஜெயாசண்முகம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சாரண, சாரணியர்கள் பேரணியில் "போதை போதை அது சாவின் பாதை” "போதையை தொடாது சாதனை படைப்போம்” என பல வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி, கோஷமிட்டவாறு பள்ளியிலிருந்து காமராஜ் நகர், மூன்றாவது மைல் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். பள்ளியின் துணை முதல்வர் ரூபி ரத்னபாக்கியம் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2பேர் கைது

செவ்வாய் 12, நவம்பர் 2019 10:46:36 AM (IST)

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education




Anbu Communications



Thoothukudi Business Directory