» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீஸ்காரர் தற்கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 27, ஜூன் 2019 12:14:47 PM (IST)

விளாத்திகுளம் அருகே போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ் மகன் கெளரிசங்கர்(33). இவர் தருவைக்குளம் காவநிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜெனிபா (27), தூத்துக்குடி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.  

இந்நிலையில், இன்று காலை அவரது மனைவி 2 குழந்தைகளையும் பள்ளிக்கு வேனில் அனுப்புவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியே இருந்த கெளரி சங்கர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த அவரது மனைவி இதனைக் கண்டு அதிரச்சியடைந்தார். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலைக்கு காரணம் என்ன?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு: கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கெளரிசங்கரின் தந்தை இருதயராஜ் காலமாகிவிட்டார். அதன் பின்னர் கெளரிசங்கர் பணிக்குச் செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், தந்தையின் உடலை வைத்திருந்ததால் அந்த தளத்தை இடித்துவிட்டு வேறு தளம் அமைக்குமாறு கெளரி சங்கரை அவரது மனைவி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் கெளரி சங்கர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் கெளரி சங்கர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும்அவரது தற்கொலைக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes




Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory