» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் துப்பாக்கியால் பரபரப்பு: போலீஸ் விசாரணை

வியாழன் 27, ஜூன் 2019 11:46:14 AM (IST)

தூத்துக்குடியில் முதியவர் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி சண்முகபுரம் வண்ணார் 1வது தெருவைச் சேர்ந்தவர் பரஞ்சோதி மகன் ராயக்கன் (73). இவர் தனது வீட்டு வாசலில் துப்பாக்கியுடன் அமர்ந்திருப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராஜாமாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் வைத்திருப்பது ஏர்கன் வகை துப்பாக்கி என்பது தெரியவந்தது. ஏர்கன் வகை துப்பாக்கி வைத்திருக்க உரிமம் ஏதும் தேவை இல்லை என்றபோதிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்தக் கூடாது என போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Nalam Pasumaiyagam


Anbu Communications


Black Forest Cakes



Thoothukudi Business Directory