» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிமொழி எம்.பி பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் : கீதாஜீவன் எம்எல்ஏ., அறிவிப்பு

திங்கள் 17, ஜூன் 2019 7:13:54 PM (IST)

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி கனிமொழி எம்.பி. தலைமையில் வரும் 23 ம் தேதி விளாத்திகுளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கீதாஜீவன் எம்எல்ஏ.,  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, ஆளும் அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. மழைக் காலத்தில் வருகின்ற தண்ணீரை முறையாக குளம் மற்றும் கண்மாய்களை தூர்வாராத காரணத்தால் சேமித்து வைக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலந்தது. குடிமராமத்து  என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஒதுக்கி அதன் வேலை முடிந்ததாக கணக்கு காட்டி அ.தி.மு.க.வினர் பணத்தை சுரண்டியதால் வந்ததன் விளைவே இதுவாகும்.

அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி குடிநீர் பிரச்சனையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குடிப்பதற்கு தண்ணீரின்றி பொதுமக்கள் வைப்பாற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்தால் அதிகாரிகள் அதையும் மனசாட்சியின்றி மூடியுள்ளார்கள். அதே நேரத்தில் போர் போட்டு மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்யும் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.

விளாத்திகுளம் தொகுதியில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சனையை கேள்விபட்ட தூத்துக்குடி எம்பி., கனிமொழி கருணாநிதி முதல்கட்டமாக கடுமையான குடிநீர் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் பகுதிகளான கத்தாளம்பட்டி, துலுக்கன்குளம், குமரிகுளம், விருசம்பட்டி, பெரியசாமிபுரம், கலைஞானபுரம் பகுதிகளுக்கு தன்னுடைய சொந்த செலவில் லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.இது நிரந்தர தீர்வு ஆகாது என்பதால் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு விளாத்திகுளம் எம்ஜிஆர் சிலை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டமானது மாநில மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி.,தலைமையில் மாவட்ட பொறுப்பாளராகிய கீதாஜீவன் எம்எல்ஏ., மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்சனையான குடிநீர் பிரச்சனைக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந் திரளாக கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

இவன்Jun 18, 2019 - 11:34:54 AM | Posted IP 173.2*****

திருட்டு திராவிட கட்சியால் ( திமுகவும் அதிமுகவும்) நம் முன்னோர்கள் குடிநீருக்காக பாதுகாத்து வந்த இயற்கை ஏரி, குளங்களை இழந்தோம். திருட்டு கட்சிகளுக்கு பணம் , பதவி மட்டும் தான் முக்கியம்

manithanJun 18, 2019 - 10:58:21 AM | Posted IP 108.1*****

மழைக் காலத்தில் வருகின்ற தண்ணீரை முறையாக குளம் மற்றும் கண்மாய்களை தூர்வாராத காரணத்தால் சேமித்து வைக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதனை சரி செய்தலே போதும்...

சூப்பர்Jun 17, 2019 - 09:47:10 PM | Posted IP 108.1*****

ஆமாம் - நாற்பது பேர் பங்கேற்பார்கள்

தமிழ்ச்செல்வன்Jun 17, 2019 - 07:19:52 PM | Posted IP 162.1*****

நல்லா ஊரை ஏமாத்துறீங்களேடா! என்னா ஒரு புத்திசாலித்தனம்! கூட்டு களவாணிகளா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory