» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாஞ்சிநாதனின் 108ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

திங்கள் 17, ஜூன் 2019 5:46:03 PM (IST)வீர வாஞ்சிநாதனின் 108ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் அவரது உருவ படத்திற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுததப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்தவர் வாஞ்சிநாதன். இந்திய விடுதலைப்போரில் ஆங்கிலேயருக்கு எதிராக தமிழகத்தில் முதன் முதலில் ஆயுதம் ஏந்திய மாவீரன். சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலக்கட்டத்தில், மணியாச்சி ரயில் சந்திப்பில் இருந்து கொடைக்கானல் செல்வதற்காக, 17.6.1911 இல் ரயிலில் அமர்ந்திருந்த அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை  தனது கைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு வீர மரணம் அடைந்தார்.

இன்று வாஞ்சிநாதனின் 108வது நினைவு தினமாகும். இதை முன்னிட்டு துாத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் வீர வாஞ்சிநாதனின் உருவ படத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் மலர் தேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இது போல் இந்து முன்னணி சார்பில் அவரது படத்திற்கு மாலை அனிவித்தும் மரியாதை செய்யப்பட்டது. மேலும், மாணவ, மாணவியர் பல்வேறு அமைப்பினர் வாஞ்சிநாதனுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 


மக்கள் கருத்து

சாமிJun 20, 2019 - 01:12:11 PM | Posted IP 108.1*****

ஆங்கிலேயன் வந்ததால்தான் இங்கே எல்லாம் வந்தது என்கிற கூட்டம் சொல்வது சரியா - மூவாயிரம் ஆண்டின் முன்னேயே கடல் வாணிகம் கண்டவர்கள் நாம் - சோழனும் சேரனும் பாண்டியனும் கடல் கடந்து புகழ் கொடி நாட்டியவர்கள் - இப்படி ஒரு வரலாறு கொண்ட இனத்தில் - ஆங்கிலேயர் வந்ததால்தான் இவை இல்லாம வந்தது என்பது அறிவீனம் - யார் வந்தாலும் வராவிட்டாலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லா இடமும் பரவும் - சைபர் கண்டுபிடித்தது இந்தியன் - வானசாஸ்திரம் கண்டிபிடித்தது இந்தியன் - யோகா இந்தியருக்கு சொந்தமானது - உலகம் போற்றும் ஆயுர்வேதம் இந்தியருக்கு சொந்தமானது - ஒரு சிலர் ஆங்கிலேயரின் அடிவருடிகளாக இருப்பது அவர்களின் உரிமை

நான்Jun 19, 2019 - 07:02:07 PM | Posted IP 162.1*****

முட்டாளை நம்பும் இனொரு முட்டாள் கூட்டம்..

தியாகிJun 19, 2019 - 12:58:08 PM | Posted IP 162.1*****

விடுதலை வீரர்களைகூட வெறும் ஜாதிக்காணோட்டத்தில் பார்க்கும் நோக்கு வேதனை தருகிறது

சாமி அவர்களுக்குJun 19, 2019 - 11:34:45 AM | Posted IP 173.2*****

நீராவி என்ஜின் முதல்ல ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டது அறிவியல் பாடத்தை நன்றாக படிக்கவும்... ஆங்கிலேயர்கள் நமக்கு ரயில் நிலையத்தை விட்டு கொடுத்து போய்விட்டார்கள் ...

முட்டாள் சாமி அவர்களுக்குJun 19, 2019 - 11:34:34 AM | Posted IP 173.2*****

நீராவி என்ஜின் முதல்ல ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டது அறிவியல் பாடத்தை நன்றாக படிக்கவும்... ஆங்கிலேயர்கள் நமக்கு ரயில் நிலையத்தை விட்டு கொடுத்து போய்விட்டார்கள் ... உன் தாத்தாவா கண்டுபிடித்தார்கள் ??? சங்கிக்கு மண்டையில் எல்லாம் மாட்டு சாணி தான்

சாமிJun 19, 2019 - 09:43:41 AM | Posted IP 162.1*****

ஆங்கிலேயனுக்கு இவ்வளவு அடிவருடிகளா ?

உண்மைதான்Jun 18, 2019 - 11:41:39 AM | Posted IP 173.2*****

1893 இல் ஆங்கிலேயர் உதவியால் திருநெல்வேலியில் ஜங்ஷன் ரெயில் நிலையம் உருவானது , அதன் பிறகு படிப்படியாக கயத்தாறு இல் சிறிய விமான நிலையம் இருந்தது, சில மதவாதிகளால் நின்றுபோனது .. ஆங்கிலேயர்கள் உதவி இல்லாவிட்டால் திருநெல்வேலியில் ரெயில் நிலையமே இருந்திருக்காது,...இவர்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும் ? அப்பாவி கலெக்டர் ஐ தேவையில்லாமல் சுட்டு கொல்வது பெரிய பாவம் தான் ..

மக்கள்Jun 18, 2019 - 11:26:26 AM | Posted IP 162.1*****

கலெக்டர்ஐ சுட்டதால் வாஞ்சிநாதன் சுதந்திர போராட்ட தியாகியா? உண்மையில் எதெற்காக சுட்டார் என்று தெரியுமா , தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருவரின் சவ ஊர்வலத்தை ஐயங்கார் தெரு வழியாக ஆஷ் கலெக்டர் அடக்கதிற்கு கொண்டு சென்றார் . அதான் கலெக்டர் ஐ சுட்டு கொன்றார் .

RV hariJun 17, 2019 - 10:14:00 PM | Posted IP 162.1*****

வாஞ்சிநாதனை நினைவு கூர்ந்த அனைவருக்கும் நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory