» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

திங்கள் 17, ஜூன் 2019 5:13:59 PM (IST)மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1.23 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (17.06.2019) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் , முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் , மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்கனை பெற்றுக்கொண்டார்.அதனைத்தொடர்ந்து, விளாத்திகுளம் வட்டம் வாதலக்கரை இடைச்சியூரணி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவர் தனக்கு மூன்று பிள்ளைகள் என்றும், இரண்டு பெண்பிள்ளைகள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர் என்றும், தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாகவும், தனது மூத்த மகள் லட்சுமிபிரியா பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருவதாகவும், மேற்படிப்பிற்கு தன்னிச்சையாக சென்று வர இயலாத காரணத்தினால் தனது மூத்த மகளுக்கு கருணை அடிப்படையில் மூன்று சக்கர மோட்டார் பொருத்திய சைக்கிள் வழங்கிடுமாறு கோரி மனு அளித்துள்ளார்.

மனுவினை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் , மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து, செல்வி.லெட்சுமிபிரியா என்பவருக்கு மூன்று சக்கர மோட்டார் பொருத்திய சைக்கிள் வழங்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், செல்வி.லெட்சுமிபிரியா என்பவருக்கு ரூ.54,000/- மதிப்பிலான மூன்று சக்கர மோட்டார் பொருத்திய சைக்கிள் மற்றும் அவரது சகோதரி செல்வி.காவியா என்பவருக்கு ரூ.7,800/- மதிப்பிலான மூன்று சக்கர நாற்காலி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் டுவிபுரத்தை சேர்ந்த செல்வி.முத்துமீனா என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்ப உரிமை நிதியில் இருந்து விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள சென்று வர செலவு தொகை ரூ.69,000/-க்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications


Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory