» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் இஸ்திரி பெட்டிகள் வழங்கல்

திங்கள் 17, ஜூன் 2019 4:33:45 PM (IST)ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கிராம மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 122 இஸ்திரி பெட்டிகள் வழங்கப்பட்டது. 

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடி பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனது. மேலும் பெண் தொழில் முனைவோர்களுக்கான நிதி உதவி, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, சிறப்பு மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள் போன்றவற்றை நடத்தி பொதுமக்களின் ஆரோக்கியத்திலும் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. 

பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தேவை அதிகரித்து வருவதையொட்டி அக்கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு கோரிக்கை வைத்தனர். இதை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முத்துசரம் - தாமிர சுரபி திட்டத்தில் அக்கிராமங்களுக்கு தேவையான குடிநீரை விநியோகம் செய்து வருகிறது. இதேபோல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தூத்துக்குடி பகுதியை சுற்றி சிறுதொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் நிறுவனம் கிராம மக்கள் 122 பேருக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான இஸ்திரி பெட்டிகளை வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இஸ்திரி சங்க தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். பண்டாரம்பட்டி கிராம சமுதாய தலைவர்கள் செல்லப்பாண்டியன் மற்றும் ஹரிகிருஷ்ணன், மீளவிட்டான் கிராமத் தலைவர்கள் முத்துராஜ், பழனிகுமார் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தனவேல், ராதாகிருஷ்ணன், சர்வேசன், குமரவேந்தன், விமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இஸ்திரி போடும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி தாளாளர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை

திங்கள் 23, செப்டம்பர் 2019 8:13:04 PM (IST)

Sponsored Ads
CSC Computer Education

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory