» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்பிக் நிறுவனம் சார்பில் இலவச நோட்டுகள் வழங்கல்

திங்கள் 17, ஜூன் 2019 4:25:16 PM (IST)



தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனம் சார்பில்  800 மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

ஸ்பிக் நிறுவனம் சமுதாய மற்றும் மக்கள் நலப்பணிகளில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக இலவச நோட்டுகள் தங்கம்மாள்புரம் மேல்நிலைப்பள்ளி, சூசைநகர் மாணவர்கள் மற்றும் அபிராமிநகர் தொழிற்பயிற்சிப் பள்ளியை சேர்ந்த 800 மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் ஸ்பிக் முழுநேர இயக்குனர் எஸ்.ஆர். இராமகிருஷ்ணன் தலைமை வகித்து மாணவர்களிடையே அப்துல்கலாம் பொன்மொழிகளை விளக்கி அறிவுரை வழங்கினார். மேலும் இவ்விழாவில் ஸ்பிக் உதவி துணைத் தலைவர் (நிர்வாகம்) கே.கோபாலகிருஷ்ணன் - முதன்மை இயக்க அதிகாரி, பாலு, மக்கள் தொடர்பு உதவி மேலாளர் எம.ஜே.அமிர்தகௌரி மற்றும் ஸ்பிக் நிறுவன அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி தாளாளர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை

திங்கள் 23, செப்டம்பர் 2019 8:13:04 PM (IST)

Sponsored Ads


Anbu Communications

Nalam Pasumaiyagam

Black Forest Cakes



CSC Computer Education




Thoothukudi Business Directory