» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் முகிலன் மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

திங்கள் 17, ஜூன் 2019 4:12:40 PM (IST)சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை மக்கள் முன் நிறுத்தக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தூத்துக்குடியில் முகிலன் மீட்பு கூட்டியக்கம் சார்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து மக்கள் முன் நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்ட செயலளார் அர்ஜூனன், நாம் தமிழர் இளைஞர் பாசறை செயலளார் வேல்ராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலளார் மாரிசெல்வம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பிரபு, மகேஸ்குமார், ஆம் ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடியில் கடந்த 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் அரசு பயங்கரவாதம் குறித்து கடந்த பிப்.15ஆம் தேதி சென்னை பத்திக்கையாளர் மன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் முழுமையான ஆதாரங்களை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக அன்று இரவே அவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். 121 நாட்கள் ஆகியும், அவர் என்ன ஆனால் என்று தெரியவில்லை. அவரை மக்கள் முன் நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விசயத்தில் அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தூத்துக்குடியில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றினைந்து தமிழக அரசை வலியுறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory