» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம் : விவசாயி பரபரப்பு மனு

திங்கள் 17, ஜூன் 2019 3:53:04 PM (IST)நிதி நிறுவனத்திடம் இருந்து டிராக்டரை மீட்டுத் தராவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம் என விவசாயி ஒருவர் பரபரப்பு மனு அளித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள சோனகன்விளை நாலயிரமுடையார் குளத்தைச் சேர்ந்த விவசாயி தர்மராஜ் என்பவர், தனது குடும்பத்தினருடன் கையில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதையடுத்து அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்ன அவரை ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில், "நத்தகுளம் பாசனப்பகுதியில் எங்களுக்கு விவசாய நிலம் உள்ளது. விவசாயம் பாெய்த்துவிட்ட காரணத்தினால் எனது தந்தை இளைய பெருமாள் மனம் வருந்தி   வயலிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து நான் ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கி அதன்மூலம் தொழில் செய்து வந்தேன். டிராக்டருக்கு முறையாக மாத தவனை கட்டி வந்த நிலையில், பணம் வசூலிக்கும் அண்ணாமலை என்பவர் எங்களை ஏமாற்றி விட்டதால் நிதி நிறுவனத்தினர் எங்களிடம் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்து விட்டனர். இதனால் எங்களது வாழ்வாதரம் பறிபோய்விட்டது. நாங்கள் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எங்களது டிராக்டரை மீட்டுத் தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எனது தந்தை காட்டிய வழியில் நானும் எனது குடும்பத்தினரும் ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் அருந்தியோ, தீக்குளித்தோ தற்கொலை செய்து கொள்வோம் என மனுவில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory