» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகர பகுதியில் 15ம் தேதி மின்தடை

புதன் 12, ஜூன் 2019 6:44:37 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் வருகிற ஜூன் 15ம் தேதி (சனிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர்புறக் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 15ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதன் காரணமாக பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. 

இதன்படி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம்தெரு, 1ஆம் ரயில்வே கேட், 2ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தெப்பகுளம், சிவன் கோயில் தெரு, டபுள்யூ.ஜி.சி ரோடு, ஜார்ஜ் ரோடு, வி.இ. ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, முத்து கிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், சிதம்பர நகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார்புரம் அண்ணா நகர் டூவிபுரம், ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டப்பிடாரம் பகுதிகளில் மின்தடை

அதே போல் மற்றொரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 15 ம்தேதி சனிக்கிழமை அன்று ஓட்டப்பிடாரம், ஓசனூத்து, ஆரைகுளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் ளதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Anbu Communications


Black Forest Cakes




Thoothukudi Business Directory