» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பெண் காெலை : மகன் கைது

புதன் 12, ஜூன் 2019 6:21:34 PM (IST)

தூத்துக்குடி அருகே முக்காணியில் பெற்ற தாயை கட்டையால் தாக்கி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி வடக்குயாதவர்தெருவை சேர்ந்தவர் நட்டார்அம்மாள் (65). இவரது இரண்டாவது மகன் மாயாண்டி (35). இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் உள்ளது. 

ஜாமீனில் வெளியே இருந்து வந்த அவர் கடும் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை நட்டார்அம்மாளுக்கும், மாயாண்டிக்கும் தகராறு ஏற்பட்டதாம். வாக்குவாதம் முற்றவே கோபமடைந்த மாயாண்டி அங்கிருந்த கட்டையால் தனது தாயை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமையில் சம்பவஇடம் வந்த போலீசார் இறந்த நட்டார் அம்மாள் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயாண்டி கைது செய்யப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Anbu Communications





Black Forest Cakes



Thoothukudi Business Directory