» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சென்னை உயர்நீதிமன்ற புதிய அமர்வு உத்தரவு

புதன் 12, ஜூன் 2019 5:09:06 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இவ்வழக்கு நீதிபதி சசிதரன் அமர்வு வழக்கில் இருந்து விலகியதால், நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், தொழில் வளர்ச்சி அமைப்புகள் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மதிமுக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

தமிழக அரசுக்கு எதிரான ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் வழக்கில், இடைமனுதாரராக யாரையும் சேர்க்கக் கூடாது என்ற ஸ்டெர்லைட் நிறுவன கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தங்களையும் மனுதாரராக இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த பொன்ராஜ், கணேசன் இருவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் பாத்திமாபாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன், மனித உரிமை பாதுகாப்பு மைய தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிராகவன் உள்ளிட்டோரை மனுதாரராக இணைத்துக் கொள்ள தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, 

அதனால் அவர்களது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு, வேதாந்தா நிறுவனத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாக நீதிமன்றத்தில் வைகோ குற்றம்சாட்டினார். இடைமனுதாரர்கள் விபரங்களை முழுமையாக அறிந்து கொண்ட பின்பு, வழக்கு விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இரண்டு அமர்வுகளில் இருந்து சில காரணங்களால் வழக்கு மாறியதால், ஸ்டெர்லைட் நிறுவனம் தொடுத்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது அமர்வு இதுவாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education





Thoothukudi Business Directory