» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலி கையெழுத்திட்டு தந்தையின் பிஃஎப் பணம் மோசடி : சகோதரி மீது பெண் புகார்

புதன் 12, ஜூன் 2019 4:25:37 PM (IST)

குரும்பூர் அருகே போலி கையெழுத்திட்டு தந்தையின் பிஃஎப் பணத்தை மோசடி செய்ததாக சகோதரி மீது பெண் புகார் அளித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அங்கமங்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் மலர்வேந்தன். இவரது மகள்கள் லெட்சுமி (57), ராதிகா. இந்நிலையில், மலர்வேந்தன் காலமான பின்னர் அவரது வைப்பு நிதி பணம் ரூ.50ஆயிரத்தை கடந்த 31.5.2017-அன்று  போலி கையழுதிட்டு ராதிகா எடுத்து விட்டாராம். இதையறிந்த லெட்சுமி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரோஸ்மேரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory