» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இளம்பெண் மாயம் திடீர் : போலீஸ் விசாரணை

புதன் 12, ஜூன் 2019 4:06:16 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தாயாருடன் தங்கியிருந்த இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சாமிநகரைச் சேர்ந்தவர் சின்னமுத்து. இவரது மகள் இசக்கிஜோதி (17). பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். இவரது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இசக்கிஜோதி, தாயாருக்கு துணையாக மருத்துவமனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இசக்கிஜோதி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

CSC Computer EducationNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory