» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடல்நீரை முழுமையாக பயன்படுத்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் முடிவு

புதன் 12, ஜூன் 2019 8:11:45 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கும் போது நீர் பயன்பாட்டில் முழுமை அடையும் வகையில் கடல்நீரை சுத்திகரித்து முழுமையாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அந்த ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் உப்புத் தன்மை அகற்றப்பட்ட நீர் வழங்கலுக்காக 2013-14 ஆம் ஆண்டில் இருந்து எஸ்ஜிடபுள்யூடி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டிருக்கிறது. அதன்படி, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்துக்கு அதன் இயக்க செயல்பாடுகளில் பயன்படுத்துவதற்காக நேரிடையாக எஸ்ஜிடபுள்யூடி நிலையம் உப்பு அகற்றப்பட்ட நீரை வழங்கிக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்படுகிற அளவை முழுமையாக அதிகரிக்க தற்போது திட்டமிட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரின் பயன்பாட்டை 70 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி ஆலையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும்போது நீர் பயன்பாட்டில் முழுமையாக சுயசார்பு நிலையை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 10 எம்எல்டி (ஒரு நாளுக்கு மில்லியன் லிட்டர்) திறனுள்ள கடல்நீரை உப்புநீக்கி குடிநீராக மாற்றுவதற்கான ஆலையை நிறுவுவதற்கு சவுத் கங்கா வாட்டர் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் அரசின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கடல்நீரை பெற ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முடிவு செய்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் முத்துச்சரம் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரு நாள்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு குடும்பத்திற்கும் 36 லிட்டர் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது. இதுவரை 1000 குடும்பங்கள் வரை இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைகின்றன. இந்தத் திட்டம் ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கிய 5000 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்குவது என ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பங்கஜ் குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

வந்து முருகன்Jun 12, 2019 - 03:00:26 PM | Posted IP 108.1*****

டேய் என்னடா நடக்குது இங்க. இவளவு பகிங்கிரம அறிக்கை விட்டு இருக்கான்.

ஏ ராஜாJun 12, 2019 - 02:00:18 PM | Posted IP 162.1*****

முதலில் தண்ணீர் கொடுங்கள் பிறகு பால்ஊ ற்றுங்கள்

ஒருவன்Jun 12, 2019 - 09:51:32 AM | Posted IP 162.1*****

வட நாட்டுக்காரன் (குஜராதிகாரன்) அணில் அகர்வால் ஊர்ல கொண்டு வைக்க துப்பில்லை.... இன்னுமா நம் நாட்டில் பணத்துக்காக திருந்தாத ஜென்மங்கள் இன்று வாழ்கிறது...

manithanJun 12, 2019 - 09:50:59 AM | Posted IP 162.1*****

அப்போ நீங்கதான் மக்களுக்கு தண்ணீர் குடுக்கிறீங்க அரசாங்கம் சும்மாதான் இருக்கிறது போல..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory