» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விரைவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

புதன் 12, ஜூன் 2019 7:55:12 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வைப்பாற்றில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்காக நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் விளாத்திகுளம் மார்க்கெட் அருகே நடந்தது. கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது: வெற்றி பெறுவதற்கு தேர்தலில் நிற்பது வழக்கம். ஆனால் சிலர் எங்களை தோற்கடிக்க வேண்டும் என்று தேர்தலில் நின்றார்கள். 

ஆனால் அவர்கள் தோல்வி பெற்று துரோகி என்ற பெயரை பெற்று இன்று வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வெட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கட்சியை யாரும் உரிமை கொண்டாட முடியாது. 8 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது அமைச்சராகவும் இருக்கிறேன். ஒரு சொத்து கூட எனது பெயரில் வாங்கியதில்லை. அப்படி நான் சொத்து வாங்கியதை நிரூபித்தால், எனது பதவியை ராஜினாமா செய்வேன்.

அ.தி.மு.க. வாக்குகளை ஒருவர் பிரித்தால் தி.மு.க. வெற்றி பெறும் என நினைத்தார்கள். அது முடியவில்லை. பா.ஜனதாவும், மோடியும் தமிழகத்துக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை தி.மு.க.வினர் உருவாக்கி நாடாளுமன்ற தேர்தலில் மக்களை ஏமாற்றி உள்ளனர். எனக்கு பின்பு ஆட்சி தொடரும் என்று ஜெயலலிதா கூறினார். அது 9 தொகுதியின் வெற்றியின் மூலம் உறுதியாகி உள்ளது.

விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட வைப்பாற்றில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தீரும். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், புதூர், கயத்தாறு ஆகிய 5 ஒன்றியங்களைச் சேர்ந்த அனைத்து கிராமங்களும் பயன்பெறும் வகையில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர், கழக பேச்சாளர் திருச்சி ஹரி கிருஷ்ணன், குட்லக் செல்வராஜ், புதூர் ஒன்றிய செயலாளர் ஞானகுருசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், நகர செயலாளர் நெப்போலியன், முன்னாள் ஒன்றிய சேர்மன் தனஞ்செயன், காந்தி காமாட்சி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சீனி என்ற ராஜகோபால், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சுபாஷ்சந்திரபோஸ், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் தம்பிதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

அறிவாளிJun 13, 2019 - 09:48:10 AM | Posted IP 162.1*****

செயற்கை குடிநீர் உடம்புக்கு நல்லதல்ல . அரசியல்வாதிகளுக்கு அறிவியல் புத்தி இருக்காது

அறிவாளிJun 13, 2019 - 09:43:14 AM | Posted IP 108.1*****

செயற்கை குடிநீர் உடலுக்கு கேடு விளைவிக்கும் .. அரசியல்வாதிகளுக்கு அறிவியல் புத்தி இருக்காது

வந்து முருகன்Jun 12, 2019 - 03:01:21 PM | Posted IP 108.1*****

சூப்பர் ராஜா.

இவன்Jun 12, 2019 - 01:05:19 PM | Posted IP 162.1*****

அதை ஸ்டெர்லைட் க்கு அனுமதி கொடுப்பாராம்

rajaJun 12, 2019 - 10:00:06 AM | Posted IP 162.1*****

உயர் திரு அமைச்சர் அவர்களே நமது மாவட்டத்தில் மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் மழை நீரை சேமித்து வைத்தாலே நிறைய பயன் பெறலாம் ...தயவு செய்து இதற்கும் நடவடிக்கை எடுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory