» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் நவீன மயமாக்கம்; மாற்று இடத்தில் பஸ்கள் புறப்பட ஏற்பாடு

செவ்வாய் 11, ஜூன் 2019 7:51:12 AM (IST)

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் நவீனமயாக்கப்படுவதால் தற்காலிகமாக பஸ்கள் மாற்று இடத்தில் இருந்து புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. 

இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் நவீனமயாக்கப்படுவதால் அங்குள்ள கடைகளை காலி செய்வதற்கான காலக்கெடு நிறைவடைந்துள்ளது. பழைய பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் தற்காலிகமாக மாற்று இடத்தில் இருந்து புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் இருந்தும் பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது’’ 

‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் 37 அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட்டுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் இதுவரை 765 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் மட்டுமே மீதம் இருக்கிறது. மற்ற அமிலங்கள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு விட்டன. மீன்பிடி தடைகாலம் வரும் 15ம் தேதி முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச்சட்டத்தின் படி பதிவுசெய்யப்பட்ட 24 மீட்டர் நீளம் மற்றும் 240 குதிரைத்திறன் (ஹெச்பி) திறன் கொண்ட விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படும்.  என்றார்


மக்கள் கருத்து

AnanthJun 13, 2019 - 09:42:26 PM | Posted IP 162.1*****

Correct

ArulJun 12, 2019 - 06:52:27 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி பேருந்து நிலையம்.,பழைய பேருந்து நிலையத்திலே அமைப்பது சரியானது தீர்வு அல்ல, நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டிருக்கிறது இதன் காரணமாக பேருந்து நிலையத்தை நகரின் புறநகர் பகுதியான கோரம்பள்ளத்தில் அமைப்பது சரியான தீர்வாகும்

ராஜாJun 12, 2019 - 05:52:09 PM | Posted IP 162.1*****

சூப்பர்

மக்களின் நண்பன்Jun 11, 2019 - 01:11:23 PM | Posted IP 108.1*****

பழைய பஸ்ஸ்டாண்ட் என் வெளியில் கொண்டு சென்றால் நல்லது தானே...மக்களின் பயன் படும் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும் அல்லவா....தற்போது இடத்தில மினி பபஸ்மட்டும் உள்ளிருந்து வெளிய வும் சென்று வரும் பொழுது தூத்துக்குடி ஊறும் விஸ்தாரமாக்கப்படும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory