» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் வெறிச்செயல்

திங்கள் 10, ஜூன் 2019 9:03:05 AM (IST)

எட்டயபுரத்தில் குடும்பத் தகராறில் இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிர்பட்டி தெற்கு ஆறுமுக முதலியார் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவருடைய மனைவி முனீஸ்வரி (32). இவர்களுக்கு முகேஷ் (11) என்ற மகனும், மஞ்சு (9) என்ற மகளும் உள்ளனர். கருப்பசாமி கோவில்பட்டியில் உள்ள ஒரு கோழிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தான் வீட்டுக்கு வருவாராம். மேலும் கருப்பசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்தது.

இந்நிலையில் நேற்று மாலையில் கருப்பசாமி வீட்டுக்கு வந்தார். அந்த நேரம் பிள்ளைகள் விளையாடுவதற்காக வெளியே சென்று விட்டனர். வீட்டில் முனீஸ்வரி மட்டும் இருந்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே வழக்கம் போல் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி வீட்டில் இருந்த அரிவாளால் தனது மனைவி முனீஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து கருப்பசாமி தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயக்குமார், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் முனீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கருப்பசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். எட்டயபுரத்தில் இளம்பெண்ணை கணவரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamAnbu Communications

CSC Computer Education

Black Forest Cakes


New Shape Tailors
Thoothukudi Business Directory