» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பேருந்து நிலைய கடைகளை காலி செய்ய உத்தரவு : மாநராட்சி நோட்டீஸ்

செவ்வாய் 4, ஜூன் 2019 5:14:50 PM (IST)

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகளுக்காக அங்குள்ள கடைகளை 48 மணி நேரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என மாநராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 1000 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை ரூ. 57 கோடியில் நவீனமயமாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வருகிறது.

இந்தப் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக பழைய பேருந்து நிலையத்தில் உள்ள 48 கடைகளை காலிசெய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தப்பட்டது. இதை எதிர்த்து பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கடையை காலிசெய்ய அவகாசம் வேண்டும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. உரிய அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த கடைகளும் காலிசெய்யப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான வீ.ப. ஜெயசீலன் கடை நடத்துவோருக்கு 3.6.2019 தேதியிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை கடையை காலிசெய்யாத நிலையில், இந்த கடிதம் கிடைத்த 48 மணி நேரத்துக்குள் கடையின் பொறுப்பை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால், நீதிமன்ற தீர்ப்பின்படி கடைகள் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத்தொகை தங்களிடம் இருந்து சட்ட ரீதியாக வசூல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மத்தியில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

கேனைJun 6, 2019 - 08:14:59 PM | Posted IP 173.2*****

மோதல்ல பஸ் ல சீட் பொடுகுங்கல அப்புறம் பஸ் ஸ்டாண்ட் கட்டலாம் குசுமார் காண்ட்ராக்டர் போல ....

ப. சுகுமார்Jun 6, 2019 - 12:01:34 AM | Posted IP 162.1*****

அரசின் இந்த மக்கள் நலத் திட்டத்துக்கு வியாபார நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வியாபாரிகளும் தூத்துக்குடி வாசிகளே. தூத்துக்குடி நகர வளர்ச்சியில் அவர்களுக்கு முழு பொறுப்பு உண்டு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam



Black Forest Cakes




Thoothukudi Business Directory