» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாட்டின் நலன்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் : தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேச்சு!!

வெள்ளி 31, மே 2019 4:58:42 PM (IST)"தமிழ்நாட்டின் நலன்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழகத்தின் அரணாக திமுக இருக்கும்" என தூத்துக்குடியில் நடந்த திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.

தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் திமுக வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகம் இந்தியாவுக்கு அரணாக இருக்கும் என்பதை இந்த நாடாளுமன்ற தேர்தல் எடுத்துக் காட்டுகிறது. பாஜக தலைமையை எதிர்த்து அவர்களது அச்சுறுத்தலை மீறி நாம் வெற்றி பெற்றுள்ளோம். தூத்துக்குடி தொகுதியில் நாம் பெற்ற வெற்றிக்கு கீதாஜீவன் எம்எல்ஏவின் உழைப்பு, தளபதியின் உழைப்பு காரணம். இது என்னுடைய வெற்றி அல்ல. உங்களது வெற்றி. நாம் ஒன்றுபட்டாலதான் வெற்றி பெற முடியும். நம்மிடமுள்ள சின்ன சின்ன சலனங்களை தூக்கி எறிய வேண்டும். 

விளாத்திகுளம் தொகுதியில் ஜெயகுமாரின் வெற்றி கைநழுவி போனது குறித்து நாம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். விரைவில் ஆட்சிமாற்றம் வரலாம். விரைவில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல் உட்பட இனிவரக்கூடிய தேர்தல்களில் நாம் வெற்றியை மீட்டெடுக்க வேண்டும். கலைஞரின் ஆசைப்படி தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருக்க வேண்டும். நமது வெற்றியால் பலனில்லை என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் டெல்லியின் தலைமைக்கு தலையாட்டுபவர்கள். தமிழ்நாட்டின் நலன்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழகத்தின் குரலாக இருந்து அனைத்து திட்டங்களையும் போராடி பெற்றுத் தரும். என்னை நேரடியாகவும், மாவட்டச் செயலளார்கள் மூலமாகவும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்


மக்கள் கருத்து

NagarajanBabuமே 31, 2019 - 10:20:11 PM | Posted IP 173.2*****

என் இனிய நல்வாழ்த்துக்கள்!

சாமிமே 31, 2019 - 06:43:32 PM | Posted IP 162.1*****

காவிரி - கச்சத்தீவு - முல்லைப்பெரியாறு - இத்தனையையும் காவுகொடுத்து - இலங்கையில் தலனை கொத்து கொத்தாய் கொன்றவர்கள் - சொல்றாங்க - கேட்டுக்குங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory