» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை

ஞாயிறு 26, மே 2019 9:30:03 AM (IST)

கழுகுமலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை, தியாகி வெங்டாசலபதி தெருவைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி மாடசாமி. இவருக்கும் தேவர்குளத்தைச் சேர்ந்த தங்கம் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது . தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து, கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications




Black Forest Cakes



Thoothukudi Business Directory