» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோயில் கொடை விழாவில் மோதல்: 10 பேர் மீது வழக்கு

ஞாயிறு 26, மே 2019 9:26:33 AM (IST)

சாத்தான்குளம் அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்னர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தாய்விளையில் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடை விழாவையொட்டி நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் சிங்கராஜ், நாககனி உள்பட 10 பேர் காயமடைந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் சிங்கராஜ், நாககனி ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர். இதில், சிங்கராஜ் புகாரின் பேரில் குமார், இளவரசன், மதுரைவீரன், சுரேந்தர், கிருஷ்ணன், பாக்கியமணி ஆகிய 6 பேர் மீதும், நாககனி அளித்த புகாரின் பேரில் சிங்கராஜ், அரிச்சந்திரன், முத்துக்குமார் , செல்வின் ஆகிய 4 பேர் மீதும் என 10 பேர் மீது உதவி காவல் ஆய்வாளர் அமலோற்பவம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education

Thoothukudi Business Directory