» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேச்சுவார்த்தை தோல்வி : பள்ளிவாசல் மீண்டும் மூடல்

ஞாயிறு 26, மே 2019 9:22:28 AM (IST)

பாண்டவர்மங்கலத்தில் பள்ளிவாசலை நிர்வகிப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்படாததையடுத்து பள்ளிவாசல் மீண்டும் நேற்று மூடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த பாண்டவர்மங்கலம் ஊராட்சி, தென்றல் நகரிலுள்ள தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசலில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை சம்பந்தமாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக இரு தரப்பினரிடையே சமாதானக் கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் இம்மாதம் 9ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில், இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்படாததையடுத்து பள்ளிவாசல் மூடப்பட்டு காவல் துறை மற்றும் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வீர.கதிரவன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு நேற்று பள்ளிவாசலில், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வட்டாட்சியர் பரமசிவன், மண்டல துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் தலைமையில் போலீசார் மற்றும் இரு தரப்பினர் கலந்து கொண்டனர். 

இதில், எவ்வித உடன்பாடும் ஏற்படாததையடுத்து பள்ளிவாசலை மூடினர். இதுகுறித்து, வழக்கறிஞர் வீர.கதிரவன் கூறியது; பள்ளிவாசல் பிரச்னை தொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியதில், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. ரமலான் மாதத்தை பொறுத்து இஸ்லாமிய மக்கள் தங்களுடைய தொழுகை செய்ய வேண்டிய நிலையையடுத்து நீதிமன்றத்தால் கூறப்படும் நபர் பள்ளிவாசலில் தொடர்ந்து, தொழுகை வைப்பதையும், இறைப் பணியையும் செய்வார் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Black Forest CakesAnbu CommunicationsNalam Pasumaiyagam

CSC Computer EducationThoothukudi Business Directory