» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்விரோதத்தில் வாலிபர் கொலை: மேலும் ஒருவர் கைது

ஞாயிறு 26, மே 2019 9:06:32 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (27). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் (38) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தங்கப்பாண்டி தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். 

ஊருக்கு அருகே வல்லக்குளம் ரோட்டில் வந்தபோது அங்கு சென்ற சுப்பிரமணியன் மற்றும் அவருடைய உறவினர்கள் ஊய்க்காட்டான் (21), சுந்தரம் (28), கார்த்திக் (27) ஆகியோர் தங்கப்பாண்டியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊய்க்காட்டான், சுந்தரம், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். சுப்பிரமணியனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory