» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: 29‍ம் தேதி தொடங்குகிறது

ஞாயிறு 26, மே 2019 8:56:53 AM (IST)

கோவில்பட்டி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 29-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.

இதுகுறித்து கோவில்பட்டி அரசு கல்லூரி முதல்வர் தீபா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020-ம் கல்வி ஆண்டிற்கான மாணவ- மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 10 மணிக்கு அனைத்து பாடப் பிரிவுகளுக்குமான சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறும். இதில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், என்.சி.சி., விளையாட்டு பிரிவைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். 

அன்று மதியம் 2 மணிக்கு ஆங்கில பாடப்பிரிவிற் கான கலந்தாய்வு நடக் கிறது. வருகிற 30-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ் பாடப்பிரிவுக்கும், மதியம் 2 மணிக்கு வணிகவியல் பாடப்பிரிவிக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 31-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வரலாறு பாடப்பிரிவுக்கும், மதியம் 2 மணிக்கு கணினி அறிவியல், புவி அமைப்பியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu Communications


Nalam Pasumaiyagam


Black Forest Cakes




Thoothukudi Business Directory