» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிஎஸ்ஐ குருப்பட்ட ஆராதனை இடமாற்றம்

சனி 25, மே 2019 7:33:39 PM (IST)

தூத்துக்குடி சிஎஸ்ஐ குருப்பட்ட ஆராதனை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிஎஸ்ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் புதிதாக 13 பேருக்கு குருப்பட்ட அபிஷேக ஆராதனை நாளை (ஞாயிறு) மாலை 4 மணிக்கு வெள்ளாளன்விளை சிஎஸ்ஐ ஆலயத்தில் நடைபெறுவதாக ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில்  அந்த அபிஷேக ஆராதனை நாளை (ஞாயிறு) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி சண்முகபுரம் தூயபேதுரு ஆலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட 13 பேருக்கும் இன்று மாலை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13 பேரின் குடும்பத்தினரும் அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுத்து விட்டு கார் ,வேன், பஸ் போன்ற வாகனங்களை வெள்ளாளன்விளை செல்ல ஏற்பாடு செய்து விட்டனர். இந்நிலையில் திடீரென நடைபெற்ற இந்த இடமாற்றம் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சிஎஸ்ஐ பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்மே 25, 2019 - 08:20:33 PM | Posted IP 162.1*****

காரணம் என்ன? எல்லா CSI சபைகளில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து தூத்துக்குடியில் CBSE பள்ளி தொடங்கவும், சாண்டி கல்லூரியை விலைக்கு வாங்க போறேன் எனவும் பத்து கோடி ரூபாய் ஆட்டைய போட்டாச்சு. கல்லூரியை வாங்கவில்லை. வெள்ளாளன்விளையில் ஒரு புதிய கலை கல்லூரி தொடங்க அந்த ஊர் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் குருபட்ட ஆராதனையை அங்கு நடத்தினால் அந்த சபைக்கு மேலும் அஞ்சு லட்சம் செலவாகும். மேலும் குருபட்டம் அளிப்பதிலும் சீனியாரிட்டியில் கடும் கோல்மால். அதனால் அந்த சபை மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வெள்ளாளன்விளை காரன் கல்லூரி கட்டுவானா? அல்லது உங்களுக்கு சோறு போட்டு பணத்தை வீணடிப்பானா? வெள்ளாளன்விளை சபை மக்களுக்கு பாராட்டுக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory