» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை விபத்துகளை 25 சதவீதம் குறைக்க முயற்சி : எஸ்பி., முரளிரம்பா பேட்டி

சனி 25, மே 2019 6:59:24 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட 25 சதவீத விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா தெரிவித்தார். 

திருச்செந்தூர் சப் டிவிஷன் போலீசார் மற்றும் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் இணைந்து விபத்தை குறைப்பதற்காக வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல்  பெட்ரோல் பங்கிற்கு வந்தால் பெட்ரோல் போடுவதில்லை என புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதற்காக திருச்செந்தூர், குலசேகரன்பட்டணம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் உள்ள இந்த புதிய முன்மாதிரி முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் நடந்தது. ஆர்.டி.ஒ., தனப்பிரியா தலைமை வகித்தார். டி.எஸ்.பி.பாரத் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா விழிப்புணர்வு நோட்டீஸ்  வழங்கி வாகன பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சப் டிவிஷனிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் உரிமையாளர்கள் மற்றும் போலீசாரோடு இணைந்து விபத்தை குறைக்கும் முயற்சியாக வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் பெட்ரோல் போடுவதில்லை என்ற புதிய முயற்சியை துவங்கியுள்ளனர். திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி. பாரத் முயற்சியாக இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்காக இன்னும் ஒரு வார காலம் பொதுமக்களிடையே ஹெல்மெட் இல்லாமல் சென்றால் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில்லை என்ற விழிப்புணர்வு நோட்டீஸ் கிராம மக்களுக்கு வழங்கப்படும். இதற்கான முயற்சியில் அருகில் உள்ள அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள போலீசார் ஈடுபடுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் & திருநெல்வேலி ரோட்டில் பைக்கில் சென்ற இருவர் விபத்தில் ஹெல்மெட் இல்லாததால் உயிரிழப்பு ஏற்பட்டது. 

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். ஹெல்மெட் அணிந்தால் உயிரிழப்பை தடுக்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் 2017&18ம் ஆண்டு 20 சதவீதம் விபத்துக்கள் குறைக்கப்பட்டன. 2018&19ம் ஆண்டில் இன்னும் 25 சதவீத விபத்துக்களை குறைக்க முயற்சி எடுத்து வருகிறோம். இந்த புதிய முயற்சி பலன் அளித்தால் தூத்துக்குடி டவுன், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு எஸ்பி முரளிரம்பா கூறினார். 

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வழக்கறிஞர் சங்க தலைவர் ஜேசுராஜ், துணைத்தலைவர் முத்துகுமார், பொருளாளர் முகேஷ், இன்ஸ்பெக்டர்கள் திருச்செந்தூர் தாலுகா முத்துராமன், ஆத்தூர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த், ஆறுமுகநேரி பவுன் பத்திரகாளி, சப் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜன், கார்த்திக், அன்னஜோதி, போக்குவரத்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, பெட்ரோல்பங்க் உரிமையாளர்கள் ஹரிகிருஷ்ணன், காயல்பட்டணம் மொகதஸீம், பொன்னையா, முக்காணி ராஜா, பரமன்குறிச்சி மணிகண்டன், குலசை ராஜேஷ், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications
Black Forest Cakes
Thoothukudi Business Directory