» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்களை எஸ்பி ஆய்வு

சனி 25, மே 2019 3:18:30 PM (IST)தூத்துக்குடியில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் காவல்துறை வாகனங்களை மாவட்ட எஸ்பி முரளி ரம்பா ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று (25.05.2019) நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆய்வு செய்து, வாகனத்தை சிறப்பாக பராமரித்து வரும் வாகன ஓட்டுனர்களுக்கு வெகுமதி வழங்கினார்.

அதன் பிறகு காவல்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார்.

மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் சிப்காட் காவல் நிலையம் தில்லை நாகராஜன,; ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் ஜோசப் ஜெட்சன், ஆழ்வார்திருநகரி காவல் நிலையம் பத்மகுமாரி, விளாத்திகுளம் காவல் நிலையம் பத்மநாபபிள்ளை, எட்டையாபுரம் காவல் நிலையம் வனசுந்தர் மற்றும் சாய் லட்சுமி, தேர்தல் கட்டுப்பாட்டு அறை அருள் ரோஸ் சிங் மற்றும் பத்மாவதி, ஆயுதப்படை மகேஷ் பத்மநாபன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 104 காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில்; காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வேதரத்தினம், நிர்வாகம் பொன்ராமு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் பிரகாஷ், திருச்செந்தூர் பாரத், ஸ்ரீவைகுண்டம் சகாய ஜோஸ், கோவில்பட்டி ஜெபராஜ், விளாத்திக்குளம் ஜெயக்குமார், மணியாச்சி ரவிச்சந்திரன், மாவட்ட குற்றப்பிரிவு ரமேஷ், நில மோசடி தடுப்பு பிரிவு பால்துரை, ஆயுதப்படை மாரியப்பன் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் மற்றும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கிறிஸ்டி உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory