» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்

செவ்வாய் 21, மே 2019 11:26:39 AM (IST)

தூத்துக்குடியில் கணவர் பிரிந்து சென்றதால் குழந்தைகளுடன் வறுமையில் தவித்து வந்த  இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மனைவி ராஜலெட்சுமி (32). இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மாயகிருஷ்ணன் தனது மனைவியை பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் ராஜலெட்சுமி தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். வறுமையில் தவித்து வந்த  அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விவசாயி தற்கொலை 

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள அக்காநாயக்கன்பட்டி கிராமம் வடக்கு காலனியைச் சேரந்தவர் காசி மகன் செல்லையா (39), விவசாயி. இவரது மனைவி மகாலெட்சுமி. போதிய வருமானம் இல்லாததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த செல்லையா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer Education




Black Forest Cakes


Anbu Communications



Thoothukudi Business Directory