» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை!!

செவ்வாய் 21, மே 2019 11:10:41 AM (IST)

தூத்துக்குடியில் குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி, மேல சண்முகபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி மகன் அந்தோணி (41). இவரது மனைவி சாந்தி (37). இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சாந்தி கணவரை விட்டு பிரிந்து பாத்திமா நகரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இதையடுத்து நேற்று இரவு அந்தோணி, மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அங்கு சென்று அழைத்துள்ளார். 

ஆனால், சாந்தி அவருடன் செல்ல மறுத்துவிட்டாராம். இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணி தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் தீவைத்து சாந்தியின் வீட்டிற்குள் வீசியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த சாந்தியின் சித்தப்பாவான சேசு மகன் ரோசையா (54) என்பவர் மீது விழுந்து தீப்பற்றியது. இதில் தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து அந்தோணியை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education

New Shape Tailors



Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory