» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை

செவ்வாய் 21, மே 2019 8:02:05 AM (IST)

கோவில்பட்டி அருகே கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் சிந்தன்நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வகுமார் (35). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு உஷா என்ற மனைவியும், 9 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் செல்வகுமாருக்கு அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணுடன் அவர் தனியாக குடித்தனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.  இதனை அவருடைய மனைவி ,பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் அதனை பொருட்படுத்தாமல், கடந்த சில நாட்களாகவே தனது வீட்டுக்கு வராமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வகுமார் தனது கள்ளக்காதலியின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த கருப்பசாமி இதுபற்றி நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes


New Shape Tailors

Nalam Pasumaiyagam



CSC Computer Education



Thoothukudi Business Directory