» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை

செவ்வாய் 21, மே 2019 7:51:15 AM (IST)



தூத்துக்குடியில்  சீரான குடிநீர் வழங்ககோரி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 

தூத்துக்குடி மாநகராட்சி 52-வது வார்டுக்கு உட்பட்ட முத்தையாபுரம் பொன்னாண்டி நகரில் சுமார் 75 குடும்பங்கள் உள்ளன. இங்கு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 4-வது குடிநீர் குழாய் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பொன்னாண்டி நகரில் உள்ள 3-வது மற்றும் 4-வது தெருக்களில் தண்ணீர் வழங்கப்படவில்லையாம். இதனால் பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் முத்தையாபுரத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகையிட்டு சீரான குடிநீர் வழங்க கோரி திடீரென போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களில் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes






Anbu Communications



Thoothukudi Business Directory