» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு

செவ்வாய் 21, மே 2019 7:43:49 AM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நாளை முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பொதுமக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் நடந்து நாளையுடன் (புதன்கிழமை) ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. 

முன்னதாக நினைவேந்தல் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள், நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நினைவேந்தல் கூட்டத்தில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது.  இந்நிலையில் தூத்துக்குடி நகர மற்றும் புறநகர் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நினைவேந்தல் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் ஸ்டெர்லைட் போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அதன்படி, தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள சிப்காட், புதுக்கோட்டை காவல் நிலையங்களில் 25 பேர் மீதும், தூத்துக்குடி நகரில் உள்ள காவல் நிலையங்களில் 22 பேர் மீதும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்காக நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்ட பலர் தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் சார் ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் கலோன் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

ராம்போமே 22, 2019 - 05:15:04 PM | Posted IP 172.6*****

கலவரம் செய்ய எந்த ஜனநாயகமும் அனுமதி அளிக்காது

தமிழ்ச்செல்வன்மே 21, 2019 - 09:38:33 AM | Posted IP 108.1*****

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. ஆறாம் வகுப்பு வரலாறு பாடத்தில் எவ்வளவு பெரிய பொய்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

CSC Computer Education


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory