» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் : கீதாஜீவன் எம்எல்ஏவலியுறுத்தல்

வெள்ளி 17, மே 2019 8:34:48 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைக்க வேண்டும் என்று திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்..
 
இதுகுறித்து அவர் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய மனு விவரம்: தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நேரத்தில் தூத்துக்குடி ரூரல், சங்கரபேரி, மீளவிட்டான், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு முறையே 1, 2, 5, 17, 18, 48, 49, 50, 51 முதல் 60 வரை என 18 வார்டுகளாக பிரிக்கப்பட்ட. இந்த வார்டு பகுதிகளுக்கு பொதுமக்களின் அத்தியாவசிய பணிகளான சாலை வசதி, சீரான குடிநீர், கழிவுநீர் வடிகால், சுகாதார வசதி எதுவும் இதுவரை முழுமை பெறமால் உள்ளது. ஆனால் வீட்டுத் தீர்வை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த வரி உயர்வானது பொதுமக்களை மிகவும் பாதிக்கும் செயலாகும். அடிப்படை வசதிகள் முழுமை பெறாமல் சொத்துவரியை பல மடங்கு உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம். பழைய நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளை விட புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில்தான் மிக அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறு சீராய்வு செய்து குறைத்து அறிவித்திட கேட்டுக் கொள்கிறேன். மறுசீராய்வு செய்யாதபட்சத்தில் திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

பிம்பிலிகா பிளாப்பிமே 19, 2019 - 08:59:35 PM | Posted IP 108.1*****

ஏதாவது சொல்லுற போறேன்

Davidமே 19, 2019 - 12:30:16 AM | Posted IP 162.1*****

Super Madam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory