» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் பங்கேற்க அனுமதி

புதன் 15, மே 2019 3:09:40 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் 500பேர் கலந்து கொள்ளலாம் என உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22 -ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 உயிரிழந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வரும் மே 22 -ஆம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. 

ஆனால் கூட்டம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, மே 22-ஆம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா பாபு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கூட்டத்தில் யாரெல்லாம் பேசுகின்றனர், கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவர் என்ற விவரங்களை மனுதாரர் தரப்பு அரசு வழக்குரைஞரிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.தண்டபாணி ஆகியோர் கொண்ட அமர்வில் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி பெல் ஹோட்டல் உள் அரங்கத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும், மே 22 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும், போலீஸாரின் நிபந்தனைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்றனர். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500ஆக உயர்த்தி நீதிமன்றம் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தது. ஏற்கனவே 250 பேர் கலந்து கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது 500 பேர் கலந்து கொள்ளலாம் என நீதிமன்றம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

ராஜாமே 16, 2019 - 04:11:46 PM | Posted IP 108.1*****

OMG

தனி ஒருவன்மே 16, 2019 - 02:28:25 PM | Posted IP 162.1*****

5௦௦ பேர் தான்வர வேண்டுமா ... கொடுமை

Venkateshமே 16, 2019 - 10:17:53 AM | Posted IP 108.1*****

Super

Venkateshமே 16, 2019 - 10:17:49 AM | Posted IP 173.2*****

Super

சாமான்யன்மே 15, 2019 - 10:52:35 PM | Posted IP 108.1*****

விந்தை தீர்ப்பு. கலந்து கொள்ளுங்கள். போலிஸ் நிபந்தனை ஏற்றுக் கொள்ளுங்கள். நியாயம். அரசியல் கட்சிகளுக்கு ஏன் நிபந்தனை விதிக்க கூடாது. ஏன் ஒரு வார்த்தை விசாரணைக் கமிஷன்கள் ஒரு வருஷமா என்ன பண்ணுதுனு கேட்க கூடாது. ஏழை ரத்தம் தக்காளி சட்னியா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory