» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் குழந்தையுடன் மாயம்: போலீஸ் விசாரணை

புதன் 15, மே 2019 11:50:22 AM (IST)

எட்டையபுரம் அருகே ரேஷன் கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற இளம்பெண் குழந்தையுடன் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே உள்ள சோழபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி விஜயலெட்சுமி (37). இந்த தம்பதியருக்கு சக்தி ஹரஹரன் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி காலையில் விஜயலெட்சுமி ரேசன் கடைக்கு செல்வதாக தனது மகனுடன் சென்றார். அதன் பின் அவர் வீடுதிரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes





Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory