» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏழைப்பெண்ணின் கணவர் சிகிச்சைக்கு தமிழிசை உதவி

புதன் 15, மே 2019 11:32:17 AM (IST)

தூத்துக்குடியில் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைப்பெண் கணவரின் சிகிச்சைக்கு உதவி செய்தவாக பாஜக தலைவர் தமிழிசை உறுதியளித்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்திளார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தூத்துக்குடியில் அதிமுக கூட்டணிக் கட்சியினருடன் நேற்று ஆலோசனை நடத்திவிட்டு வரும் வழியில், ஏழைப் பெண் ஒருவர் என்னை சந்தித்து தனது கணவர் இருதய நோயால் அவதிப்படுவதாகவும் அவருக்கு உதவி செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து நான் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று அவரது நலம் விசாரித்து, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தேன்.  மேலும், அவருக்கு தேவையான  உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளேன் என்றார். 

மேலும் அவர் கூறுகையில், "இந்து தீவிரவாதி என்று கமல்ஹாசன் பேசியது தவறு. அவரை யாரோ இதுபோல் பேசத் தூண்டிவிடுகிறார்கள். கமலுக்கு பின்னல் உள்ள சக்தி எதுவென்று தெரியவில்லை. அவரது பேச்சுக்கு, தீவிரவாதத்தால் தலைவனை பறிகொடுத்த ஒரு கட்சியின் தலைவரே ஆதரவு தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. காந்தியின் கொள்ளு பேரன் என்று தன்னை கூறிக்கொள்ளும் கமல்ஹாசன், ஒருகாலத்தில் இந்த நாட்டை விட்டே போகிறேன் என்று கூறியவர். இந்தியாவில் 3ஆவது அணிக்கு வாய்ப்பே கிடையாது. அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. தோல்வி பயம் காரணமாக ஸ்டாலின் முடிவெடுக்க முடியாமல் தினறி வருகிறார். கமல்ஹாசன் விவகாரத்தில் அவர் எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்? திமுக என்றுமே தமிழகத்திற்கு எதிரான கட்சிதான்" என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education


Black Forest Cakes

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory